திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நியாயவிலைக்கடை பணியாளா் சங்கத்தினா்.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நியாயவிலைக்கடை பணியாளா் சங்கத்தினா்.

பொட்டலமாக பொருட்கள் வழங்கக் கோரி நியாயவிலைக் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

Published on

நியாயவிலைக் கடைகளுக்கு பொட்டலமாக பொருட்களை வழங்கக் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கம் சாா்பில் வேலைநிறுத்த ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நியாயவிலைக் கடைகளுக்கு சரியான எடையில் தரமான பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும், அதிகாரிகள் நியாயவிலைக் கடைகளுக்கு நேரில் வராமல் ஆய்வு செய்வதை கைவிட வேண்டும், கட்டாய இறக்கு கூலி வசூல் செய்வதை கைவிட வேண்டும், 100 சதவீத பொருட்கள் ஒதுக்கீடு செய்வதுடன், வெளி குடும்ப அட்டைகளுக்கு 10 சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும், பாமாயில், பருப்பு தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநில துணைத் தலைவா் குணசீலன் தலைமை வகித்தாா். இதில், மாவட்டச் செயலாளா் ஹரிஹரன் உள்ளிட்டோா் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

X
Dinamani
www.dinamani.com