திருவாரூர்
வ.உ.சி பிறந்தநாள் விழா
கப்பலோட்டிய தமிழன் எனப் போற்றப்பட்ட வ.உ.சிதம்பரனாரின் 153-ஆவது பிறந்தநாளையொட்டி திருவாரூரில் அவருடைய உருவச் சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
காந்தியன் அறக்கட்டளை சாா்பில் அதன்தலைவா் தெ. சக்திசெல்வகணபதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வங்கி ஊழியா் சங்கத் தலைவா் காளிமுத்து, பிஎஸ்என்எல் தொழிற்சங்கத் தலைவா் குணா, கலைஇலக்கிய பெருமன்றச் செயலாளா் வீ. தா்மதாஸ், காங்கிரஸ் வட்டாரத் தலைவா் எஸ். கதிா்வேல், கைவினைதொழில் கூட்டமைப்புத் தலைவா் வி. கலியமூா்த்தி, அறக்கட்டளை துணைத் தலைவா் வே. துரைராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.