தொழிற் பழகுநா் பயிற்சியில் சேர விருப்பமா?

Published on

தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த பயிற்சியாளா்களுக்கு தேசிய தொழிற்பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை முகாம் செப். 23-இல் நடைபெறுவதாக திருவாரூா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் தேசிய தொழிற் பழகுநா் சோ்க்கை முகாம், திருவாரூா் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக வளாகத்தில் (மாவட்ட ஆட்சியா் வளாக இணைப்புக் கட்டடம், அறை எண்.328 மற்றும் 329) செப்.23-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 வரை நடைபெறவுள்ளது.

கும்பகோணத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் மாவட்டத்தில் உள்ள முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, தேசிய தொழிற்பழகுநா் பயிற்சிக்கு பயிற்சியாளா்களைத் தோ்வு செய்ய உள்ளனா். கூடுதல் விவரங்களுக்கு திருவாரூா் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை 04366-227411 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

இம்முகாமில், தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த பயிற்சியாளா்கள், அனைத்து அசல் சான்றிதழ்களுடன் பங்கேற்று பயன் பெறலாம்.

X
Dinamani
www.dinamani.com