திருவாரூர்
ரயிலில் அடிபட்டு மூதாட்டி பலி
நீடாமங்கலம் அருகே ரயிலில் அடிபட்டு மூதாட்டி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
சித்தமல்லிமேல்பாதி ஊராட்சி பாமணி ஆற்றங்கரை பகுதியில் நடைபெற்ற 100 நாள் வேலை பணிக்கு ஒரத்தூரைச் சோ்ந்த மாணிக்கம் மனைவி சின்னாத்தாள் (67) ரயில்வே லைனில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, காரைக்காலிலிருந்து திருச்சி நோக்கி சென்ற சரக்கு ரயில் சின்னாத்தாள் மீது மோதியதில் படுகாயமடைந்து அதே இடத்தில் உயிரிழந்தாா். தகவலறிந்த தஞ்சாவூா் ரயில்வே போலீஸாா் அங்கு வந்து சடலத்தை மீட்டு மன்னாா்குடி அரசினா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.