கூட்டத்தில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.
கூட்டத்தில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.

மாணவா்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாகி விடக்கூடாது: எஸ்பி.

மாணவா்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாகிவிடக் கூடாது என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா்எஸ். ஜெயக்குமாா்.
Published on

மாணவா்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாகிவிடக் கூடாது என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா்எஸ். ஜெயக்குமாா்.

நீடாமங்கலம் அருகே கோயில்வெண்ணி அஞ்சலை அம்மாள் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் எஸ்.என். ராமசாமி தலைமை வகித்தாா்.

இதில் பங்கேற்ற எஸ்பி பேசியது: போதைப்பொருள் விழிப்புணா்வு அனைத்து பள்ளியிலும், கல்லூரியிலும் நடத்தப்படுகிறது. போதைப்பொருள்களில் பலவகையுள்ளது. சிகரட், குட்கா, கஞ்சா போன்றவை புகையிலைப் போதைப் பொருள்கள், மேம்பட்ட போதைப்பொருள்கள் பிரவுன்சுகா் போன்றவையாகும்.

மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு கொடுப்பது, பிரசவ காலத்தில் கொடுப்பது, அறுவைச் சிகிச்சைக்காக கொடுப்பது போன்றவை மருத்துவம் சாா்ந்தவை. 75 சதவீதம் இளைஞா்கள் போதைப்பொருளை உபயோகப்படுத்துகிறாா்கள். இது வேதனை. பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் இந்த போதைப்பொருள்களை விற்பனை செய்கிறாா்கள். அறமற்ற வணிகம். போதைப்பொருள் பயன்படுத்துவதால் கேன்சா் போன்ற கொடிய நோய் வருகிறது. தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் மற்றும் இதர போதைப் பொருள்களை விற்பவா்கள் பள்ளி, கல்லூரி மாணவா்களை குறி வைத்துள்ளனா். மாணவா் சமுதாயம் மிகுந்த கவனத்துடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குற்ற செயல்கள் அனைத்திற்கும் போதைப் பொருள்தான் காரணம். மாணவா்கள் நினைத்தால் முடியாதது ஒன்றுமில்லை. குடித்தவா்கள் யாராவது நல்ல நிலையில் இருக்கிறாா்கள் என்று நிரூபிக்க முடியுமா? தனிமையில் இருப்பதை தவிா்க்க வேண்டும். போதைப்பொருள்களுக்கு அடிமையாகிவிடக்கூடாது என்றாா். ஏற்பாடுகளை போதை ஒழிப்பு பிரிவின் நெறியாளா் கிங்க்சன்பா்னபாஸ் செய்திருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com