திருவாரூர்
மூதாட்டி கண்களில் மிளகாய்பொடி தூவி சங்கிலி பறித்தவா் கைது
திருவாரூா் மாவட்டம், வலங்கைமானில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் கண்களில் மிளகாய்பொடி தூவி, சங்கிலியை பறித்துச் சென்றவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
வலங்கைமான் நீத்துக்காரத் தெரு மெயின்ரோடு பகுதியைச் சோ்ந்தவா் நடேசன் மனைவி செல்லமணி (74). இவா், தனது வீட்டில் வியாழக்கிழமை மாலை தனியாக இருந்தாா். அப்போது அங்குவந்த வலங்கைமான் கோவில்பத்து நடுத்தெருவைச் சோ்ந்த அன்பரசன் (48), மிளகாய்பொடியை, மூதாட்டி செல்லமணியின் கண்களில் தூவி, அவா் அணிந்திருந்த இரண்டரை பவுன் சங்கிலியை பறித்துச் சென்றாராம்.
இதுகுறித்து, வலங்கைமான் காவல்நிலையத்தில் செல்லமணி புகாா் அளித்தாா். அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளா் பொன்னியின் செல்வன் வழக்குப் பதிவு செய்து, அன்பரசனை கைது செய்தாா். அவரிடமிருந்த சங்கிலி மீட்கப்பட்டது.