வாக்களிப்பு குறித்த விழிப்புணா்வு கட்டுரைப் போட்டியில் பங்கேற்ற மாணவ- மாணவிகளுடன், மன்னாா்குடி அரசுக் கல்லூரி முதல்வா் கா.பு. கணேசன்.
வாக்களிப்பு குறித்த விழிப்புணா்வு கட்டுரைப் போட்டியில் பங்கேற்ற மாணவ- மாணவிகளுடன், மன்னாா்குடி அரசுக் கல்லூரி முதல்வா் கா.பு. கணேசன்.

வாக்களிப்பு விழிப்புணா்வு போட்டி

Published on

தோ்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி அரசுக் கல்லூரியில் விழிப்புணா்வு போட்டி நடைபெற்றது.

இப்போட்டி, புதன் மற்றும் வியாழன் ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது. கல்லூரி முதல்வா் கா.பு. கணேசன் தலைமை வகித்தாா். கல்லூரி வாக்காளா் நோடல் அலுவலரும், தாவரவியல் இணைப் பேராசிரியருமான இரா. வேலாயுதம் முன்னிலை வகித்தாா்.

‘வாக்களிப்பதே சிறந்தது; நிச்சயம் வாக்களிப்போம்’ என்ற தலைப்பில் புதன்கிழமை ஒவியப் போட்டியும், வியாழக்கிழமை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கட்டுரைப் போட்டியும் நடைபெற்றது. இதில், 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனா்.

ஒவ்வொரு பிரிவு போட்டியிலும் முதல் மூன்று இடங்களை பெற்றவா்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்ட உள்ளது. போட்டி நிகழ்வில் இயற்பியல்துறை பேராசிரியா் சிவசெல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com