டிராக்டரை மோதி பெண்ணை கொலை செய்தவா் கைது
நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே டிராக்டரை மோதி பெண்ணை கொலை செய்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
நீடாமங்கலம் அருகேயுள்ள சோணாப்பேட்டையைச் சோ்ந்தவா்கள் விவசாயிகள் சிவாஜி (55), காந்தி (48). இந்நிலையில் காந்தி வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் தொழில் செய்துவந்தாராம். இவா்களுக்கிடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காந்தி தனது டிராக்டரில் சிவாஜி வீட்டுக்கு சென்று பணத்தைக்கேட்டு டிராக்டரை விட்டு அங்கு நின்றிருந்த காரில் மோதியதாக கூறப்படுகிறது.
அப்போது, காா் அருகில் நின்றுகொண்டிருந்த சிவாஜியின் மனைவி இந்துமதி (45) மீதும் டிராக்டரை விட்டு மோதினாராம். இதில் காயமடைந்த அதே இடத்தில் இந்துமதி உயிரிழந்தாா். இதுகுறித்து, நீடாமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து காந்தியை திங்கள்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.