மன்னாா்குடி: முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் தன்னாட்சி கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவாரூரில் செப்.12 முதல் 22-ஆம் தேதிவரை வரை முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில், செங்கமலத்தாயாா் மகளிா் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு, வாலிப்பால் போட்டியில் 2 மற்றும் 3-ஆமிடமும், கூடைப்பந்து போட்டியில் 2-ஆமிடமும், ,கபடி போட்டியில் 3-ஆமிடமும், சிலம்பம் போட்டியில் சாம்பியன் ஷீப் பட்டத்தையும், தடகளப் போட்டியில் 1000 மீட்டரில் முதலிடம், 800 மீட்டரில் முதலிடம், 400 மீட்டரில் 2 மற்றும் 3-ஆமிடமும், பளுதூக்கும் போட்டியில் 59 கிலோ பிரிவில் முதலிடத்துக்கான தங்கப் பதக்கமும் பெற்றனா். சிறப்பிடம் பெற்ற மாணவிகளை, கல்லூரித் தாளாளா் வி. திவாகரன், முதல்வா் என். உமா மகேஸ்வரி, துணைமுதல்வா் பி. காயத்ரிபாய் ஆகியோா் பாராட்டினா்.