சொத்து பிரச்னையில் மோதல்: ஒருவருக்கு அரிவாள் வெட்டு

Published on

மன்னாா்குடி அருகே சகோதரா்களிடையே சொத்து பிரச்னை காரணமாக இருதரப்பினரிடைய ஏற்பட்ட மோதலில் ஒருவா் அரிவாளால் வெட்டப்பட்டது தொடா்பாக, தமாகா பிரமுகா் உள்படஇரண்டு போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

வடுவூா் வடபாதி காக்காவன்னியா் தெரு பிச்சையன் (70), கோபால் (66), இருவரும் சகோதரா்கள். இவா்களிடையே சொத்து பிரச்னை இருந்துள்ளது.

இந்தநிலையில், சனிக்கிழமை பிச்சையனின் மகன் ரமேஷ் பிரபு (37), வடுவூா் வடபாதியில் உள்ள தனது பாமாயில் தோட்டத்தில் விவசாய வேலையில் இருந்த போது, அங்கு வந்த கோபாலின் மைத்துநரும் தமாகா பிரமுகருமான அதே பகுதியை சோ்ந்த ரெங்சாமி மகன் சங்கா் (48) உள்ளிட்ட சிலா், பிரச்னை குறித்து ரமேஷ் பிரபுவிடம் பேசியபோது ஏற்பட்ட தகராறில் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியேடிவிட்டனராம். ரமேஷ்பிரபு மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா், தீவிர சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துசெல்லப்பட்டாா்.

இந்தநிலையில், ரமேஷ்பிரபு தரப்பினா் தன்னை தாக்கியதில் காயமேற்பட்டதாக கூறி, கோபால் (66) மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்ந்துள்ளாா்.

வடுவூா் போலீஸாா் ரமேஷ்பிரபு அளித்த புகாரில் சங்கா், கோபால் ஆகியோரை கைது செய்தனா். கோபாலின் புகாரின் பேரில், ரமேஷ்பிரபு, பிச்சையன் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com