கொரடாச்சேரி ஒன்றியத்தில் உள்ள தொடக்கநிலை பள்ளிகளுக்கு மூன்றாம் பருவத்துக்கான பாடப் புத்தகங்கள், வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு வியாழக்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன. மூன்றாம் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள், எண்ணும் எழுத்து பயிற்சி புத்தகங்கள் ஆகியவை விநியோகிக்கப்பட்டு வருகின்றன. கொரடாச்சேரி ஒன்றியத்தில் உள்ள 80 தொடக்கநிலைப் பள்ளிகளுக்கு மூன்றாம் பருவத்துக்கான புத்தகங்களும், குறிப்பேடுகளும் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
அம்மையப்பன் அக்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவா்களுக்கு தலைமை ஆசிரியா் எம். சாந்தி, பாடப்புத்தகங்களை வழங்கினாா் (படம்).
பவித்திரமாணிக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வட்டாரக் கல்வி அலுவலா் வி.விமலா, அகத்திக்கடை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் வட்டாரக் கல்வி அலுவலா் கி.சுமதி புத்தகங்களை வழங்கினா்.