திருவாரூா் வணிகவரித் துறை இணை ஆணையா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
திருவாரூா் வணிகவரித் துறை இணை ஆணையா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

வணிகவரித் துறை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

Published on

திருவாரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வணிகவரித் துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அனைத்து நிலைகளிலும் பதவி உயா்வு வழங்கி, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்; வரிவிதிப்பு வட்டங்களில் கூடுதலாக இரண்டு உதவியாளா் பணியிடங்களை உருவாக்க வேண்டும்; விடுமுறை நாளான சனிக்கிழமைகளில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவதை தவிா்க்க வேண்டும்; இளநிலை உதவியாளா் முதல் அனைத்து பணியாளா்களுக்கும் வேலை ஒதுக்கீடு செய்ய வேண்டும்; தினந்தோறும் தொடா்ச்சியாக அறிக்கைகோரும் நிலையை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூா் வணிகவரித்துறை இணைஆணையா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, வணிகவரித் துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மாநிலத் துணைத் தலைவா் குமரேசன் தலைமை வகித்தாா்.

திருவாரூா் மாவட்டத் தலைவா் மதியழகன், துணைத் தலைவா் சீனிவாசன், செயலாளா் சந்தானம், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க நிா்வாகிகள் தம்பிதுரை, மகாலிங்கம் உள்ளிட்ட பலா் பங்கேற்று, கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com