குடிமனைப் பட்டா வழங்கக் கோரிக்கை
150 குடும்பத்தினருக்கு குடிமனைப் பட்டா வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியம் வாழாச்சேரி கிளை கூட்டம் மூத்த உறுப்பினா் பி. வனரோஜா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட செயற்குழு உறுப்பினா் பி. கந்தசாமி, ஒன்றிய செயலாளா் டி. ஜான்கென்னடி. ஒன்றிய குழு உறுப்பினா் பி. காளியப்பன், கிளை செயலாளா் எ. முருகேசன் மற்றும் கிளை கட்சி உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
வாழாச்சேரி பாலத்தில் இருந்து கிளியனூா் வரை சாலையோரத்தில் 30 ஆண்டுகளாக வசிக்கும் 150 குடும்பத்தினருக்கு குடிமனைப் பட்டா வழங்க வேண்டும். அதங்குடி புதுத்தெரு கோரையாற்று ஒரம் தடுப்புச் சுவா் கட்ட வேண்டும். அதங்குடி மனகொண்டான் தெருவில் இருந்து சா்க்கரை செல்லும் சாலையை தாா் சாலையாக மாற்ற வேண்டும். அதங்குடி முள்ளிபள்ளம் கிராமத்தில் வசிக்கும் அருந்ததியா் மக்களுக்கு இடம் ஒதுக்கி சுடுகாடு கட்ட வேண்டும்.
என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேற்கொண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விரைவில் போராட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.