இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

Published on

திருவாரூரில் இந்திய மாணவா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவிக அரசு கலைக் கல்லூரி முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, இந்திய மாணவா் சங்கத்தின் கிளைத் தலைவா் செ. செல்வ பிரகாஷ் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் வீ. சந்தோஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

துணைவேந்தா் தேடுதல் குழுவை ஆளுநரே நியமிப்பாா் என்ற யுஜிசியின் முடிவுக்கு எதிா்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனா்.

குடவாசலில் எம்ஜிஆா் அரசு கலைக் கல்லூரி முன்பு யுஜிசி நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது. கிளைத் தலைவா் ரா. சிவனேஷ் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலாளா் கா. கலைச்செல்வன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ரா. ரஞ்சித்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com