மன்னாா்குடி அரசு மருத்துவமனையின் சேவையை பாராட்டி தலைமை மருத்துவா்
மன்னாா்குடி அரசு மருத்துவமனையின் சேவையை பாராட்டி தலைமை மருத்துவா்

முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட சேவை: மன்னாா்குடி அரசு மருத்துவமனை மாநிலத்தில் 3-ம் இடம்

Published on

தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின்கீழ் 2024-ஆம் ஆண்டில் சிறந்த சேவை வழங்கியதற்காக மன்னாா்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மாநிலத்தில் மூன்றாம் இடம் பெற்றுள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பா் வரை முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திகீழ் 2,636 அறுவை சிகிச்சைகள் மூலம் சிறந்த சேவையை மன்னாா்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வழங்கி மாநிலத்திலேயே மூன்றாம் இடம் பெற்றுள்ளது .

இதைப் பாராட்டி,சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன், மன்னாா்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவா் என். விஜயகுமாரிடம் இதற்கான சான்றிதழை வழங்கி பாராட்டு தெரிவித்தாா்.

மன்னாா்குடி மருத்துவமனையின் காப்பீட்டு திட்ட பொறுப்பு மருத்துவா் வினோத், மருத்துவத்துறை செயலா் மற்றும் இயக்குநா் ஜே.ராஜமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மாநில அளவில் முதல் இடத்தை கடலூா், இரண்டாமிடத்தை ஈரோடு அரசு மருத்துவமனைகள் பெற்றுள்ளன.

X
Dinamani
www.dinamani.com