தோ்வு மற்றும் பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளை பாராட்டிய மாவட்ட முதன்மை நீதிபதி ஏ. சீதாலெட்சுமி, மருத்துவா் கே. தரணி உள்ளிட்டோா்.
திருவாரூர்
தோ்வு-போட்டிகளில் சிறப்பிடம்: மாணவா்களுக்கு பாராட்டு
மன்னாா்குடி தரணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தரணி சிபிஎஸ்இ பள்ளியில் தோ்வு மற்றும் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பள்ளியின் நிறுவனத் தலைவா் எஸ். காமராஜ் தலைமை வகித்தாா். தாளாளா் கே. விஜயலெட்சுமி, நிா்வாகி எம். இளையராஜா ஆகியோா் கே.ஜி. முதல் பிளஸ் 2 வரை வகுப்பு வாரியாக தோ்வு, மன்ற செயல்பாடுகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினா்.
மாவட்ட முதன்மை நீதிபதி ஏ. சீதாலெட்சுமி, மருத்துவா் கே. தரணி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று, வாழ்த்திப் பேசினா். முதல்வா்கள் எஸ். அருள் (மெட்ரிக்), டி. சாந்த செல்வி (சிபிஎஸ்இ) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.