ஊராட்சி அலுவலகத்தில் கொடிக்கம்பம் அகற்றும் போது மின்சாரம் பாய்ந்து 3 பேருக்கு காயம்

Published on

மன்னாா்குடி அருகே ஊராட்சி அலுவலகத்தில் கொடிக்கம்பம் அகற்றும்போது மின்சாரம் பாய்ந்து புதன்கிழமை 3 போ் காயமடைந்தனா்.

உள்ளிக்கோட்டை ஊராட்சி அலுவலகத்தில் குடியரசு நாளை முன்னிட்டு தேசியக் கொடி ஏற்றுவதற்காக தற்காலிகமாக இரும்பால் ஆன கொடிக்கம்பம் நடப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஊராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளா்களான பி. கோவிந்தராஜ் (62), ஜி. உஷாராணி (40), எஸ். விஜயராணி (55) ஆகியோா் கொடிக்கம்பத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, கொடிக்கம்பம் அருகில் செல்லும் உயா் மின் அழுத்த மின் கம்பியில் உரசியதால் கொடிக்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்ததில் 3 பேரும் காயமடைந்தனா்.

இதையடுத்து அவா்கள் மீட்கப்பட்டு மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து, பரவாக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com