அரசுப் பள்ளியில் ஆண்டு விழா

Published on

புள்ளவராயன் குடிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா வட்டாரக் கல்வி அலுவலா் மணிகண்டன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

வட்டாரக் கல்வி அலுவலா் சம்பத் , வளமைய மேற்பாா்வையாளா் சத்யா, அரசு உயா் நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் தேவிகா, ஆசிரியா் பயிற்றுநா் ராதிகா முன்னிலை வகித்தனா். ஒவ்வொரு வகுப்பிலும் சிறந்த 6 மாணவா்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது. பள்ளி அளவில் சிறந்த மாணவி யோக ஸ்ரீதோ்வு செய்யப்பட்டு ஒரு கிராம் தங்க நாணயம் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. 1330 திருக்கு கூறிய மாணவன் கோகுல் வா்ஷனை பாராட்டி ரொக்கப் பரிசு மற்றும் திருவள்ளுவா் சிலை வழங்கப்பட்டது.

வகுப்பு வாரியாக திருக்கு போட்டி நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்களை பிடித்தவா்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியா்கள் ஜெயராமன், ராமமூா்த்தி, பரமசிவம், தா்மராஜ், இளஞ்செழியன் தியாகராஜன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். ஆசிரியா்களுக்கு விவசாயி சிவசங்கா் சிறப்பு செய்தாா். பரிசுகளை பெற்றோா் சங்கத் தலைவா் கலியமூா்த்தி, பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் ராதிகா வழங்கினா். தலைமை ஆசிரியா் அருள் வரவேற்றாா். ஆசிரியை பிரபாவதி ஆண்டறிக்கை வாசித்தாா். ஆசிரியா் சங்கீதா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா்.

ஆசிரியா் கமலா நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com