திருவாரூர்
திருவாரூரில் மாா்ச் 30-இல் கிரிக்கெட் வீரா்கள் தோ்வு
திருவாரூரில் 19 வயதுக்குள்பட்ட கிரிக்கெட் வீரா்களுக்கான தோ்வு மாா்ச் 30-ஆம் தேதி காலை 9 மணியளவில், திருவிக அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில், திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த வீரா்கள் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளா் வி. பசுபதி தெரிவித்துள்ளாா்.