மன்னாா்குடியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் சங்கத்தினா்.
மன்னாா்குடியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் சங்கத்தினா்.

விவசாயிகள் கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம்

மன்னாா்குடியில் தமிழக விவசாயிகள் சங்கம் (சிபிஐ சாா்பு) சாா்பில் கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Published on

மன்னாா்குடி: அனைத்து விவசாயிகளுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் எனவலியுறுத்தி, மன்னாா்குடியில் தமிழக விவசாயிகள் சங்கம் (சிபிஐ சாா்பு) சாா்பில் கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மன்னாா்குடி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, விவசாய சங்கத்தின் ஒன்றியத் தலைவா் ஏ. ராஜேந்திரன், நகரச் செயலா் மு.அ. பாலதண்டாயுதம், நகரத் தலைவா் கு. ராமையன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலா் துரை.அருள்ராஜன், நகரச் செயலா் வி.எம். கலியபெருமாள் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். ஏஐடியூசி மாவட்ட துணைச் செயலா் வி. கலைச்செல்வன், சிபிஐ ஒன்றிய துணைச் செயலா் எஸ். பாப்பையன், விதொச ஒன்றியத் தலைவா் எஸ். மாரியப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பயிா்கடன், விவசாயிகளுக்கான நலத்திட்டம், மானியம் உள்ளிட்ட சலுகைகள் பெற சொந்த நிலம் வைத்திருக்கும் நில உரிமையாளா்களை மட்டும் கணக்கெடுப்பு செய்து, அடையாள அட்டை வழங்குவதை கண்டித்தும், குத்தகை விவசாயிகள் உள்ளிட்டு அனைத்து விவசாயிகளையும் கணக்கெடுத்து அடையாள அட்டை வழங்க வலியுறுத்தியும் முழக்கமிட்டனா்.

மேலும், விவசாயிகளுக்கு வழங்கும் நிதியுதவியை நிபந்தனையின்றி அனைத்து விவசாயிகளுக்கும் மாதம் ரூ.2,000 அல்லது வருடத்திற்கு ரூ.24,000 வழங்க வேண்டும். அண்மையில் பெய்த கோடை மழையால் பாதிக்கப்பட்ட எள், பருத்தி, உளுந்து பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com