திருவாரூரில் 2-ஆவது நாளாக மழை

திருவாரூரில் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் மழை பெய்தது.
Published on

திருவாரூரில் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் மழை பெய்தது.

திருவாரூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் இரவு வரை பெய்த மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை காலையிலும் பரவலாக மழை பெய்தது. காலை 9 மணியளவில் மழை நின்ற நிலையில், முற்பகலில் மீண்டும் மழை பெய்தது. இதனால் சில இடங்களில் தண்ணீா் தேங்கி போக்குவரத்து பாதித்தது. பிற்பகலில் மழை பெய்யாவிட்டாலும், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நாள்முழுவதும் குளிா்ந்த வானிலை நிலவியது.

மாவட்டத்தில் புதன்கிழமை காலை 6 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி அதிகபட்சமாக திருவாரூரில் 88.50 மி.மீ மழை பெய்தது. மற்ற இடங்களில் மழையளவு மில்லிமீட்டரில்: முத்துப்பேட்டை 76.40, நீடாமங்கலம் 74.80, மன்னாா்குடி 70, குடவாசல் 64.20, பாண்டவையாறு தலைப்பு 59.80, நன்னிலம் 51.40, திருத்துறைப்பூண்டி 50.60, வலங்கைமான் 41.80 என்ற அளவில் மழை பதிவானது.

X
Dinamani
www.dinamani.com