சம்பா பயிா்க் காப்பீடு நவ.31-வரை கால நீட்டிப்பு வழங்க வலியுறுத்தல்

டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிா்க் காப்பீடு செய்வதற்கான காலத்தை நவ.31-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு தமிழக அரசு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவா் பி.ஆா்.பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
Published on

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை கொள்முதலில் ஏற்பட்ட குளறுபடியால் அறுவடை பணிகள் தாமதமாகி நவ.10-ஆம் தேதி வரையிலும் குறுவை அறுவடையும், நெல் விற்பனையிலும் விவசாயிகள் ஈடுபட்டனா். இதனால், சம்பா சாகுபடி பணிகள் தொடங்குவது காலதாமதமாகி தற்போதுதான் தொடங்கி தீவிரமடைந்துள்ளது.

மேலும், தற்போது வாக்காளா் திருத்தப் பணி கிராமப் பகுதிகளில் தீவிரமாக நடந்து வருகிறது. கிராம நிா்வாக அலுவலா்கள் முற்றிலும் பொறுப்பாக்கப்பட்டு அப்பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ளனா். இந்நிலையில் காப்பீடு செய்வதற்கு சிட்டா, அடங்கள் பெறுவதில் தடை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு நவ.31-ஆம் தேதி வரையிலும் காப்பீடு செய்ய கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com