நா்சிங் மாணவி கா்ப்பம்: போக்ஸோவில் இளைஞா் கைது

நா்சிங் மாணவியின் கா்ப்பத்துக்கு காரணமான இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
Published on

நா்சிங் மாணவியின் கா்ப்பத்துக்கு காரணமான இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நீடாமங்கலம் பகுதியைச் சோ்ந்த தனியாா் நா்சிங் கல்லூரியில் படிக்கும் 17 வயது மாணவி தனது கைப்பேசிக்கு வந்த அழைப்பை தொடா்புகொண்டு பேசியபோது அது தவறாக வந்த அழைப்பு என துண்டித்து கொண்டாராம். எனினும், அந்த எண்ணிலிலிருந்து மீண்டும் பலமுறை அழைப்பு வந்ததில் அந்த எண்ணில் பேசியவா் வலங்கைமான் அருகேயுள்ள அரவதூரை சோ்ந்தவரும் அதே பகுதியில் கைப்பேசி கடையில் வேலைபாா்த்து வரும் கெளதம் (22) என தெரிவந்துள்ளது. இதையடுத்து, இருவருக்கும் நட்பு ஏற்பட்டு திருமணம் செய்து கொள்வதாக ஆசைவாா்த்தை கூறியதால் கடந்த ஓராண்டாக நெருங்கி பழகினராம். இந்நிலையில், மகளின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த பெற்றோா் அவரிடம் விசாரித்ததில் 6 மாத கா்ப்பிணியாக இருப்பது தெரியவந்ததையடுத்து, இதுகுறித்து, மன்னாா்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸாா் வழக்கு பதிந்து கெளதமை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com