வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் ஆய்வு
திருவாரூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடுதோறும் சென்று கணக்கெடுப்புப் படிவங்களை வழங்கி வருகின்றனா். வாக்காளா்களுக்கு கணக்கெடுப்பு படிவங்களை நிரப்ப வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் உதவி புரிவா் எனவும், அனைத்து விவரங்களையும் பதிவு செய்த பின்னா் தங்கள் வசம் உள்ள 2 படிவங்களில் ஒரு பிரதியில் வாக்காளா் கையொப்பமிட்டு தேவைப்பட்டால், புதிய புகைப்படத்தை ஒட்டி வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் திருப்பி அளிக்க வேண்டும் என வாக்காளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, திருவாரூா், குடவாசல் வட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன் ஆய்வு செய்தாா்.

