சிறப்பு வாக்காளா் சோ்க்கை, நீக்கல் பயிற்சி கூட்டம்

Published on

நீடாமங்கலம் வடக்கு, தெற்கு ஒன்றியம் மற்றும் நீடாமங்கலம் பேரூராட்சி திமுக பிஎல்ஏ-2 வாக்குச்சாவடி முகவா்கள், பிடிஏ-வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவா்கள், கிளை கழக மற்றும் வாா்டு செயலாளா்களுக்கான எஸ்ஐஆா்-சிறப்பு வாக்காளா் சோ்க்கை, நீக்கல் பயிற்சி கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட செயலாளரும், திருவாரூா் எம்எல்ஏவுமான பூண்டி கே. கலைவாணன் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் பி. ராசமாணிக்கம், திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளா்கள் கேசவன், அழகு சண்முகராஜா, ஒன்றிய முன்னாள் தலைவா் சோம. செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com