சாலை விபத்தில் பொறியியல் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

நீடாமங்கலம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு மேம்பால தடுப்புக் கட்டையில் மோதியதில் பொறியியல் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
Published on

நீடாமங்கலம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு மேம்பால தடுப்புக் கட்டையில் மோதியதில் பொறியியல் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

நீடாமங்கலம் அருகேயுள்ள பெரம்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் துரைராஜ் மகன் புகழ்ராஜ் (22). இப்பகுதியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரி மாணவா். செவ்வாய்க்கிழமை இரவு புகழ்ராஜ் மோட்டாா் சைக்கிளில் வையகளத்தூா் பகுதி நோக்கி சென்று கொண்டிருந்தாா். அப்போது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் மேம்பால தடுப்புக் கட்டையில் மோதியதில் கீழே விழுந்து புகழ்ராஜ் பலத்த காயமடைந்தாா்.

நீடாமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவா், புகழ்ராஜ் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தாா். நீடாமங்கலம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com