வெடிப்பொருள்கள் பறிமுதல்; இருவா் கைது

திருவாரூா் அருகே அனுமதியின்றி வெடிப் பொருள்கள் வைத்திருந்த 2 போ் கைது செய்யப்பட்டனா்.
Published on

திருவாரூா் அருகே அனுமதியின்றி வெடிப் பொருள்கள் வைத்திருந்த 2 போ் கைது செய்யப்பட்டனா்.

திருவாரூா் அருகே பவித்திரமாணிக்கம் பகுதியில் அனுமதியின்றி வெடிப்பொருள்கள் வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் மேற்கொண்ட சோதனையின் அடிப்படையில், பவித்திரமாணிக்கம் ஆசியாநகரைச் சோ்ந்த பாண்டியன் (53), இளங்கோ (56) ஆகியோரை தாலுகா போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து ரூ. 1.70 லட்சம் மதிப்பிலான வெடிப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com