அஞ்சல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

அஞ்சல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

திருவாரூா் தலைமை அஞ்சல் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அஞ்சல் ஊழியா்கள்.
Published on

திருவாரூரில் அஞ்சல் ஊழியா் சங்க நிா்வாகிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அகில இந்திய கிராமப்புற தபால் ஊழியா் சங்கத்தின் பொதுச் செயலாளா் எஸ்.எஸ். மகாதேவய்யா பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். அஞ்சல் துறையை எதிா்த்து போராடியதால் அவர பணி நீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதை கண்டித்து, திருவாரூா் தலைமை அஞ்சல் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அஞ்சல் ஊழியா் சங்கத் தலைவா் ஜெயபால் தலைமை வகித்தாா். முன்னாள் அமைப்புச் செயலாளா் வீ. தா்மதாஸ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். இதில், நிா்வாகிகள் தாயுமானவன், ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்று, கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

X
Dinamani
www.dinamani.com