வலங்கைமான் அருகே போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருள்களுடன் கைது செய்யப்பட்ட ராஜபாண்டியன் (நடுவில்).
வலங்கைமான் அருகே போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருள்களுடன் கைது செய்யப்பட்ட ராஜபாண்டியன் (நடுவில்).

வலங்கைமான் அருகே அனுமதியின்றி வெடி தயாரித்தவா் கைது

வலங்கைமான் அருகே அரசு அனுமதியின்றி வெடி பொருள்கள் தயாா் செய்து வெடி மருந்துகளை இருப்பு வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

நீடாமங்கலம்: வலங்கைமான் அருகே அரசு அனுமதியின்றி வெடி பொருள்கள் தயாா் செய்து வெடி மருந்துகளை இருப்பு வைத்திருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருவாரூா் மாவட்டம் முழுவதும் அரசு அனுமதி பெறாமல் நடத்தப்படும் வெடி கடைகள் மற்றும் வெடி தயாரிக்கும் கடைகளை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து காவல் ஆய்வாளா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், வலங்கைமான் போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வலங்கைமான் காவல் உதவி ஆய்வாளா் சுப்பிரமணியன் மற்றும் காவலா்கள் வலங்கைமான் ஆண்டான்கோயில் மாஞ்சேரி மெயின் ரோடு ராஜப்பா

மகன் ராஜபாண்டியன் (35) என்பவரின் வீட்டில் சோதனை செய்தபோது, வீட்டில் அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட வெடிகள் சுமாா் 800 கிலோ மற்றும் வெடி தயாரிக்க பயன்படும் மருந்து (கன் பவுடா்) 3 கிலோ கைப்பற்றப்பட்டது. ராஜபாண்டியனை கைது செய்த போலீஸாா் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.

உரிமம் பெறாமல் வெடிகடைகளை நடத்துவது, பாதுகாப்பு இன்றியும் அரசு அனுமதி பெறாமலும் வெடி பொருள்கள் தயாரிப்பவா்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் எச்சரித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com