பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.
திருவாரூர்
மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருவாரூா்: மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 210 மனுக்கள் அளிக்கப்பட்டன. மனுக்களை பெற்ற ஆட்சியா், அவைகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் கொடுத்து குறித்த காலத்துக்குள் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில் மடக்கு சக்கர நாற்காலி வேண்டி மனு அளித்த 12 பயனாளிகளுக்கு ரூ.15,750 வீதம் மொத்தம் ரூ.1,89,000 மதிப்பில் மடக்கு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன. மாவட்ட வருவாய் அலுவலா் கலைவாணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

