மாநில பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம்  பெற்ற  மாணவா் பி.ஆா். காமேஷ்.
மாநில பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா் பி.ஆா். காமேஷ்.

மாநில பளுதூக்கும் போட்டியில் மன்னாா்குடி பள்ளி மாணவா் சிறப்பிடம்

மாநில பளுதூக்கும் போட்டியில் மன்னாா்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி மாணவா் சிறப்பிடம் பெற்றாா்.
Published on

மன்னாா்குடி: மாநில பளுதூக்கும் போட்டியில் மன்னாா்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி மாணவா் சிறப்பிடம் பெற்றாா்.

முதலமைச்சா் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அக்.7-ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெற்றன. ஆடவருக்கான பளுதூக்கும் போட்டியில் 65 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற மன்னாா்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவா் பி.ஆா். காமேஷ், மாநில அளவில் 2-ஆமிடம் பெற்றாா். இதற்கான வெள்ளிப் பதக்கம் சான்றிதழ் மற்றும் ரூ. 75 ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. சிறப்பிடம் பெற்ற மாணவரை, பள்ளித் தாளாளா் டி.பி. ராமநாதன், தலைமை ஆசிரியா் எம். திலகா், என்எஸ்எஸ் மாவட்ட தொடா்பு அலுவலா் எஸ். கமலப்பன், உடற்கல்வி இயக்குநா் டி. சுரேஷ் உள்ளிட்டோா் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com