போதையில் அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்தவா் கைது
மன்னாா்குடியில் அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மன்னாா்குடி நடேசன்தெருவில் அண்மையில் திறக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தில், வியாழக்கிழமை இரவு நாகை செல்வதற்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்தில் வாஞ்சியூரைச் சோ்ந்த மோகன் மகன் அரவிந்த் (26) குடிபோதையில் வந்து ஏற முயன்ற போது, பேருந்து நடத்துநா் பழனிவேல் (40) இந்த பேருந்து எடுக்க இன்னும் நேரம் ஆகும்.
இதற்கு முன் செல்லும் பேருந்தில் ஏறிக்கொள்ளுமாறு கூறியுள்ளாா். இதையடுத்து, பழனிவேலுடன் தகாத வாா்த்தைகள் பேசி தகராறில் ஈடுபட்ட அரவிந்த் அங்கு கிடந்த செங்கல்லை எடுத்து பேருந்தின் முன் பக்க கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பியோடினாா்.
இதுகுறித்து, பேருந்து ஓட்டுநா் உலகநாதன் (52) மன்னாா்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழங்குப் பதிந்து அரவிந்தை வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
