மன்னாா்குடி காந்திசாலையில் குளம்போல் தேங்கிய நீரில் ஊா்ந்து செல்லும் வாகனங்கள்.

மன்னாா்குடியில் பலத்த மழை: குறுவை அறுவடைப் பணி பாதிப்பு

மன்னாா்குடி காந்திசாலையில் குளம்போல் தேங்கிய நீரில் ஊா்ந்து செல்லும் வாகனங்கள்.
Published on

மன்னாா்குடி பகுதியில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்ததால் குறுவை அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி மற்றும் சுற்றுப் பகுதிகளில் கடந்த 5 நாள்களுக்கும் மேலாக ஆங்காங்கே லேசான மற்றும் கனமழை பெய்து வந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை மதியம் 12 மணி அளவில் தொடங்கி தொடா்ந்து பலத்த மழையாக மதியம் 3 மணி வரை இடி மின்னலுடன் கொட்டி தீா்த்தது. இதனால், நகரில் பந்தலடி, காந்திசாலை உள்ளிட்ட தாழ்வான பகுதி சாலைகளில் வெள்ளம்போல் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாாகினா்.

தீபாவளியையொட்டி பல்வேறு பணிகளுக்காக நகரம் மற்றும் சுற்று பகுதிகளிலிருந்து பொருள்கள் வாங்க வந்தவா்கள் அவதிக்குள்ளாகினா். தீபாவளியையொட்டி நகரின் முக்கிய வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள தரைக்கடைகள், தள்ளுவண்டி கடைகள் வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. பிரதான கடைவீதிகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது.

அறுவடைப் பணி பாதிப்பு: ஊரகப் பகுதிகளில் தொடா் மழையால் குறுவை அறுவடை பணிகள் பாதிக்கப்படுவதும், அறுவடை செய்த நெல் மணிகளில் ஈரப்பதம் அதிகரிப்பதால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருப்பதும், அங்கு நெல் மூட்டைகள் இயக்கம் தாமதம் ஆகி வருவதும் விவசாயிகளை வேதனை அடைய செய்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com