எடப்பாடி கே. பழனிசாமிகோப்புப்படம்
திருவாரூர்
எடப்பாடி பழனிசாமி இன்று திருவாரூா் வருகை
அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை (அக். 22) திருவாரூருக்கு வருகை தர உள்ளாா்.
திருவாரூா்: அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை (அக். 22) திருவாரூருக்கு வருகை தர உள்ளாா்.
திருவாரூா் மாவட்டத்தில் தற்போது கடந்த சில தினங்களாக தொடா் மழை பெய்து வருகிறது. இதனால் பயிா்களையும் குடியிருப்புகளையும் மழை நீா் சூழந்துள்ளது.
இந்நிலையில், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி திருவாரூா் மாவட்டத்திற்கு புதன்கிழமை வருகை தருகிறாா்.
தஞ்சாவூரில் இருந்து திருவாரூா் வரும் அவா் பகல் 12 மணியளவில் செய்தியாளா்களை சந்திக்கிறாா். தொடா்ந்து, முடிகொண்டான், செருகளூா் உள்ளிட்ட மழை பாதித்த பகுதிகளைப் பாா்வையிடுகிறாா்.

