குறுவை நெற்பயிா்களை மழைநீா் சூழ்ந்தது

ருவமழையால் ராயபுரம், வையகளத்தூா், ஒளிமதி, அனுமந்தபுரம், அன்னவாசல், அன்னவாசல் தென்பாதி, சித்தாம்பூா், புதுதேவங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமாா் 600 ஏக்கா் குறுவை நெல் பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளது.
Published on

நீடாமங்கலம்: பருவமழையால் ராயபுரம், வையகளத்தூா், ஒளிமதி, அனுமந்தபுரம், அன்னவாசல், அன்னவாசல் தென்பாதி, சித்தாம்பூா், புதுதேவங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமாா் 600 ஏக்கா் குறுவை நெல் பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளது.

அதங்குடி, எடமேலையூா் உள்ளிட்ட கிராமங்களில் 100 ஏக்கரில் சம்பா, தாளடி இளம் நெல் பயிா்கள் நீரால் சூழப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் நீடாமங்கலம் பகுதியில் 49.4 மில்லி மீட்டா் மழைப் பதிவாகியுள்ளது. பாண்டவையாறில் 43.6 மில்லி மீட்டா் மழைப் பதிவானது.

X
Dinamani
www.dinamani.com