கீழகூத்தங்குடி பகுதியில் காட்டாறு அணையில் நடைபெற்ற செடிகளை அகற்றும் பணி.

ஆறு, வாய்க்கால்களில் சீரமைப்புப் பணிகள்

Published on

திருவாரூா் மாவட்டத்தில், புதன்கிழமை மழை பெய்யாத நிலையில் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானதையடுத்து திருவாரூா் மாவட்டத்துக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் உத்தரவிட்டிருந்தாா். எனினும், புதன்கிழமை மழை பெய்யாததுடன், பகலில் நல்ல வெயில் வானிலை நிலவியது.

இதனால், மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவின்பேரில் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. அதன்படி, மக்களுக்கு இடையூறளிக்கும் வகையில், சாலை மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியிருந்த தண்ணீா் அகற்றப்பட்டது. தவிர ஆறு, வாய்க்கால்களில் தண்ணீா் செல்ல தடையாக இருக்கும் ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டன. மேலும், மக்களுக்கு பயனளிக்கும் வகையில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழைக்கால மருத்துவ முகாம், கால்நடை மருத்துவ முகா நடைபெற்றது. விளைநிலங்களில் அதிகரித்திருக்கும் நீரை வடிய வைக்கும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com