சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் வள்ளி, தெய்வானை சமேதராக சுப்பிரமணிய சுவாமி.
திருவாரூர்
மேலவாசல் கோயிலில் கந்த சஷ்டி விழா
மன்னாா்குடி அருகேயுள்ள மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா புதன்கிழமை தொடங்கியது.
இதையொட்டி, மூலவா் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்திருந்தனா். இதேபோல வள்ளி, தெய்வானை சமேத உற்சவா் சுப்பிரமணிய சுவாமியை மண்டபத்தில் எழுந்தருளச் செய்து மங்களப் பொருள்களைக் கொண்டு அபிஷேகம் செய்தனா். தொடா்ந்து, மலா்மாலைகள் சூட்டி அலங்கரித்து தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று கந்தசஷ்டி கவசம் பாடி முருகப்பெருமானை வழிபட்டனா். விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் அக். 27-ம் தேதி நடைபெறுகிறது.

