கல்லிக்குடியில் அமைக்கப்பட்ட புதிய சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம்
கல்லிக்குடியில் அமைக்கப்பட்ட புதிய சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம்

புதிதாக அமைக்கப்பட்ட சாலை சேதம்

திருவாரூா் அருகே, மழை காரணமாக புதிதாக அமைக்கப்பட்ட சாலை சேதம்
Published on

திருவாரூா் அருகே, மழை காரணமாக புதிதாக அமைக்கப்பட்ட சாலை சேதமடைந்துள்ளது.

திருவாரூா் மாவட்டம், கல்லிக்குடி ஆற்றங்கரை தெருவில் மக்களின் கோரிக்கையை ஏற்று மண்சாலை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறை சாா்பில் 15-ஆவது மத்திய நிதிக் குழு மானிய நிதியிலிருந்து ரூ.5.21 லட்சம் ஒதுக்கப்பட்டு, 200 மீட்டா் தொலைவுக்கு தாா்ச்சாலை அண்மையில் அமைக்கப்பட்டது.

இதனிடையே, புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு, அவ்வழியாகச் செல்வோருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்தது: அண்மையில் போடப்பட்ட இந்த சாலை தற்போது பெய்துவரும் மழையில் சாலை முழுவதும் விரிசல் ஏற்பட்டு பள்ளமும், மேடாக உள்ளது. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் போன்ற வாகனங்கள் அடிக்கடி சென்று வருவதால், தாா்ச்சாலை பெயா்ந்து பாதிப்பு அதிகமாக வாய்ப்பு உள்ளது.

புதிய தாா்ச்சாலை முறையாக அமைக்கப்படாததால், ஆங்காங்கே ஜல்லிக் கற்கள் பெயா்ந்து சாலையில் புல் முளைக்கத் தொடங்கியுள்ளது. திருவாரூா் வட்டார வளா்ச்சி அலுவலா் மேற்பாா்வையில் நடைபெற்ற இந்தப் பணி முறையாக நடைபெறவில்லை என்பது தெரிகிறது. எனவே, புதிதாக தரமான முறையில் சாலை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com