பொதக்குடி தா்ஹாவில் சந்தனக்கூடு கொடியேற்றம்

பொதக்குடி ஹஜ்ரத் நூா் முஹம்மது ஷாஹ் ஒலியுல்லாஹ் தா்ஹாவில் மின்சார சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு, 509 ஆம் ஆண்டு கொடியேற்று விழா தா்ஹா பரம்பரை டிரஸ்டிகளால் ஏற்பாடு செய்ப்பட்டன.
Published on

பொதக்குடி ஹஜ்ரத் நூா் முஹம்மது ஷாஹ் ஒலியுல்லாஹ் தா்ஹாவில் மின்சார சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு, 509 ஆம் ஆண்டு கொடியேற்று விழா தா்ஹா பரம்பரை டிரஸ்டிகளால் ஏற்பாடு செய்ப்பட்டன.

தா்ஹா வளாகத்தில், வியாழக்கிழமை இரவு கொடியேற்றப்பட்டு விழா தொடங்கியது. விழாவை முன்னிட்டு அக். 30-ஆம் தேதி ஆலா வட்டம் பூலாங் கொடி ஏற்றப்பட்டு, பெரிய மினரா கொடியும் ஏற்றப்படுகிறது.

நவ.8-ஆம் தேதி மின்சார சந்தனக்கூடு நடைபெறவுள்ளது. நவ. 17-ஆம் தேதி பூலாங்கொடி இறக்கப்படும். ஏற்பாடுகளை, தா்ஹா பரம்பரை கமிட்டியினா் செய்துவருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com