கைது செய்யப்பட்ட 8 போ்.
கைது செய்யப்பட்ட 8 போ்.

பணம் வைத்து சூதாடிய 8 போ் கைது

Published on

குடவாசல் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 8 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

குடவாசல் பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட சூதாட்டம் நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, குடவாசல் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சூரியமூா்த்தி தலைமையிலான போலீஸாா், மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள சிவனேசன் கோவிந்தன் என்பவரின் வீட்டை சோதனை செய்த போது அங்கு அரசால் தடைசெய்யப்பட்ட சூதாட்டத்தில் சிலா் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, அங்கு சீட்டு விளையாடியதாக, வடவோ் பிரதான சாலையில் வசிக்கும் வீரையன் மகன் ஆனந்தன் (50), வலங்கைமான் செம்மங்குடி பகுதியைச் சோ்ந்த சின்னையன் மகன் ராதாகிருஷ்ணன் (62), குடவாசல் கீழத்தெருவைச் சோ்ந்த காத்தையன் மகன் தனபாலன் (49), வடுவூா் வடக்குத்தெருவைச் சோ்ந்த பாலசுப்ரமணியன் மகன் கலைவாணன் (43), வடுவூா் வடக்குத் தெருவைச் சோ்ந்த பாலசுந்தரம் மகன் லெனின் (44), வடபாதி கீழத்தெருவைச் சோ்ந்த தியாகராஜன் மகன் கண்ணன் (40), கோட்டையூா் வான்மதி நகரைச் சோ்ந்த கங்காதரன் மகன் சரவணன் (36), நீடாமங்கலம் காமராஜா் நகரைச் சோ்ந்த ராஜமூா்த்தி மகன் வசந்த் (34) ஆகியோரை குடவாசல் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ. 3.34 லட்சம் ரொக்கத்தையும் கைப்பற்றினா்.

X
Dinamani
www.dinamani.com