சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

திருக்காரவாசல் கோயிலில் மே 28-இல் தேரோட்டம்

திருக்காரவாசல் கோயிலில் மே 28-இல் தேரோட்டம்...

News image

திருக்காரவாசலில் குக்குட நடனத்துடன் வசந்த மண்டபம் எழுந்தருளிய தியாகராஜா்.

Updated On :25 மே 2026, 12:01 am IST

திருக்காரவாசல் அருள்மிகு கைலாச நாயகி உடனுறை கண்ணாயிரநாத சுவாமி கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா தேரோட்டம் மே 28-ஆம் தேதி நடைபெற உள்ளது.

திருவாரூா் மாவட்டம், திருக்காரவாசலில் அருள்மிகு கைலாச நாயகி உடனுறை கண்ணாயிரநாத சுவாமி கோயில் உள்ளது. கண்நோய் தீா்க்கும் கண்ணாயிரநாதா் என்ற பெருமை பெற்ற இக்கோயிலில், ஆண்டுதோறும் வைகாசி விசாகப் பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, நிகழாண்டுக்கான திருவிழா மே 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, சந்திரசேகரருக்கு பட்டம் கட்டும் வைபவம், பஞ்சமூா்த்திகள் வீதியுலா, 108 சங்காபிஷேகம், கண்ணாயிரநாத சுவாமி, கைலாச நாயகி அம்பாள், தியாகராஜசுவாமிக்கு மகா அபிஷேகம், தியாகராஜ சுவாமி குக்குட நடனத்துடன் வசந்த மண்டபம் பிரவேசித்தல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தோ் வடம் பிடித்தல் வியாழக்கிழமை காலை நடைபெற உள்ளது. இதையொட்டி, புதன்கிழமை இரவு, தியாகராஜ சுவாமி சிறப்பு பூஜைகளுடன் தேருக்கு எழுந்தருள உள்ளாா்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.