புது தில்லி, ஜூலை 9: தில்லியில் பல்வேறு சமுதாயப் பணிகளை மேற்கொண்டு வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.96 லட்சம் நிதியுதவி அளிக்க தில்லி மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தில்லியில் முதல்வர் ஷீலா தீட்சித் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கல்யாண் சமிதி கூட்டத்தில் இந்த நிதி ஒதுக்கீட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டது.
தில்லி மாநில அரசின் தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பு தில்லி கல்யாண் சமிதி.
சிறுநீர், ரத்த சுத்திகரிப்பு மையம், இதய நோய் சிகிச்சைக்கான பரிசோதனைக் கூடம் ஆகியவற்றை அமைக்க ஜன்கல்யாண் ஹெல்த்கேர் சென்டருக்கு ரூ.21.40 லட்சமும், தில்லியில் செப்டம்பர் மாதம் வருடாந்திர இசை விழாவை நடத்துவதற்கு லெஜன்ட்ஸ் ஆப் இந்தியா என்ற அமைப்புக்கு ரூ.20 லட்சமும் ஒதுக்கப்பட்டது.