புது தில்லி, ஜூலை 9: புது தில்லி மாநகராட்சி கவுன்சில் (என்.டி.எம்.சி.) சார்பில் சாணக்கியாபுரி தரம் மார்க்கில் கட்டப்பட்ட சிறப்புப் பல் மருத்துவமனையை மாநகராட்சி கவுன்சிலின் தலைவர் பரிமல் ராய் சனிக்கிழமை திறந்து வைத்தார்.
அதி நவீன வசதிகள் கொண்ட இந்த பல் மருத்துவமனையில், பல் தொடர்பான அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்படும்.
ஓரல் மேக்ஸிலோ பேசியல் சர்ஜரி, பிராஸ்தோடொன்டிக்ஸ், ஆர்த்தோடொன்டிக்ஸ், பெரியோடொன்டிக்ஸ் போன்ற துறைகளும் இங்கு உள்ளன. இந்த வளாகத்தில் அலோபதி,ஆயுர்வேதம், ஹோமியோபதி, ஆகிய மருத்துவமனைகளும், தாய்-சேய் நல மையமும், மருத்தகமும் இயங்கும்.
திறப்பு விழாவில் தில்லி மாநகராட்சி கவுன்சிலின் துணைத் தலைவர் தஜ்தர் பாபர், சட்டப் பேரவை உறுப்பினர் கரண் சிங் தன்வார், மாநகராட்சியின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.