புது தில்லி, ஜூலை 23: மத்திய அரசின் புதிய சொலிசிட்டர் ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் ரோஹின்டன் நாரிமனை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அடுத்த வாரம் நடைபெற உள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அவரது நியமனத்துக்கு முறைப்படி அனுமதி வழங்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
2ஜி வழக்கில் மத்திய தகவல் தொடர்புத் துறை சார்பில் மூத்த வழக்கறிஞர் ரோஹின்டன் நாரிமன் ஆஜராவார் என அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு ஆட்சேபம் தெரிவித்து சொலிசிட்டர் ஜெனரல் பதவியிலிருந்து கோபால் சுப்ரமணியம் ராஜிநாமா செய்தார். இந் நிலையில் புதிய சொலிசிடர் ஜெனரலாக ரோஹின்டன் நாரிமன் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.