புது தில்லி, ஜூலை 23: தில்லி கீர்த்தி நகரில் மின் தட்டுப்பாட்டை தடுக்க அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மரை திருடியதாக குர்ஷித் அலி (23), யூனிஸ் மாலிக் (44) ஆகியோரை போலீஸôர் கைது செய்தனர்.
கீர்த்தி நகர், நம்தாரி காலனியில் துணை மின் நிலையம் அமைக்க 990 கிலோ வாட் டிரான்ஸ்பார்மரை அமைக்க தில்லி மின் நிலையம் முடிவு செய்தது. இதன்படி தனியார் நிறுவனம் மூலம் ரூ.9 லட்சம் மதிப்பில் 900 கிலோ வாட் சக்தி கொண்ட டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. செயல்பாட்டில் இருந்த இந்த டிரான்ஸ்பார்மர் திடீரென காணாமல் போனது.
இது குறித்து கீர்த்தி நகர் போலீஸôரிடம் புகார் அளிக்கப்பட்டது. போலீஸ் விசாரணையின் அடிப்படையில் அசோக் விஹார் பகுதியைச் சேர்ந்த குர்ஷித் அலி என்பவர் கைது செய்யப்பட்டார்.
டிரான்ஸ்பார்மரை திருடியதாக அவர் ஒப்புக் கொண்டதாக போலீஸôர் தெரிவித்தனர். மேலும், திருடப்பட்ட டிரான்ஸ்பார்மரை வாங்கியதாக ரோஹிணியைச் சேர்ந்த யூனிஸ் கான் என்பவரையும் போலீஸôர் கைது செய்து அவரிடமிருந்து டிரான்ஸ்பார்மரை பறிமுதல் செய்தனர்.