தில்லியில் காணாமல்போகும் சிறார்கள்

புது தில்லி, ஜூலை 30: தில்லியில் அண்மை காலங்களில் காணாமல்போகும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக "க்ரை' என்ற தனியார் தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த நான்கு மாதங்களில்
Published on

புது தில்லி, ஜூலை 30: தில்லியில் அண்மை காலங்களில் காணாமல்போகும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக "க்ரை' என்ற தனியார் தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 1,238 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக தெரிகிறது. இவர்கள் 18 வயதுக்கு உள்பட்டவர்கள். ஆனால், காவல்துறையின் ஆவணங்களின் படி 408 குழந்தைகள் மட்டுமே காணாமல்போனதாகக் கூறப்படுகிறது.தில்லியின் 10 மாவட்டங்களிலும் உள்ள காவல் நிலையத்தில் காணாமல் போன குழந்தைகள் குறித்து தகவல் அறியும் சட்டத்தின் படி தகவல் கோரியது அந்த தனியார் தொண்டு நிறுவனம். அதில் 1,238 குழந்தைகள்  காணவில்லை என்ற புகார் வந்துள்ளதாக தகவல் கிடைத்தது. அவர்களில் 690 பெண் குழந்தைகளும், 570 ஆண் குழந்தைகளுமாவர்.காணாமல் போகும் குழந்தைகளில் 72.8 சதவீதம் பேர் 12 முதல் 18 வரையிலான வயதுடையவர்கள். இவர்கள் பாலியல் தொழில், திருமணம், வீடு மற்றும் தொழிற்சாலை வேலைகளுக்காகக் கடத்தப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இவற்றில் பெரும்பாலான குழந்தைகள் தங்கள் விருப்பத்திற்குட்பட்டு தானவே வீட்டை விட்டு வெளியேறுகின்றனர் என அந்த தனியார் தொண்டு நிறுவனத்தின் மேம்பாட்டு மேலாளர் ஜெயா சிங் தெரிவித்தார்.

பெற்றோர்களுக்கான பொது விசாரணை நடத்தப்பட்டபோது, குழந்தைகள் காணாமல் போனால், அது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய காவல்துறை மறுப்பதாக பெரும்பாலான பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர். இதனால் குழந்தைகள் காணாமல் போன புகார் தெரிவிக்கும் நடைமுறையை பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்கிறார் சமூக ஆர்வலர் ஹார்ஷ் மந்தேர்.

இது தொடர்பாக பெற்றோர்கள் தெரிவித்த புகார்களைப் பரிசீலித்து, தேவையான விசாரணைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் தொண்டு நிறுவனத்தின் தலைவர் அமோத் காந்த்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்