புது தில்லி, ஜூலை 30: ரூ. 5 கோடி பரிசுத் தொகை வழங்குவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக நைஜீரிய இளைஞர் நடி சிபஸôர் நிகோஸ் (25) என்பவர் கைது செய்யப்பட்டார்.
தில்லி கோவிந்த்புரி பகுதியில் வசித்து வரும் விஸ்வஜீத் பிஸ்வாஸýக்கு ரூ. 5 கோடி பரிசு விழுந்துள்ளதாக வெளிநாட்டு தொலைபேசி எண்ணில் இருந்து எஸ்.எம்.எஸ். வந்துள்ளது. அந்தப் பணத்தை இந்தியாவுக்குள் கொண்டு வருவதற்கு ரூ. 2 லட்சம் வரியை வங்கியில் செலுத்த வேண்டும் என்று அவருக்கு தொடர் தொலைபேசி அழைப்புகள் வந்தன.இதை அடுத்து தில்லி போலீஸில் பிஸ்வாஸ் புகார் அளித்தார். வெள்ளை காகிதங்களைப் பணக் கற்றை போல் தயாரித்த தில்லி போலீஸôர் பிஸ்வாஸிடம் ஒப்படைத்து அந்த நபரிடம் தரும்படி தெரிவித்தனர்.
சாக்கேத் பகுதியில் பணத்தைப் பெற வந்த நபரை தில்லி போலீஸôர் மடக்கிப் பிடித்தனர். நைஜீரியாவை சேர்ந்த அவரை போலீஸôர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.