புது தில்லி, ஜூலை 30: எகிப்தின் கெய்ரோவில் நடைபெற்று வரும் உலக ஜூனியர் மகளிர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் இந்திய மகளிர் அணி தோல்வி கண்டது.
சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதிச் சுற்றில் இந்திய மகளிர் அணி, அமெரிக்காவை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் அமெரிக்கா 2-1 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.