புதுதில்லி, பிப்.10: கொலைவெறிடி பாடல் புகழ் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் "3' படம் ஹிந்தியிலும் டப்பிங் செய்யப்படுகிறது.
இத்தகவலை அவர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். உலக அளவில் இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டிருப்பதால் சற்றுக் காலதாமதம் ஆகும் என்று அவர் தெரிவித்தார்.
தமிழில் தயாரிக்கப்படும் இந்தத் திரைப்படம் ஹிந்தியிலும், தெலுங்கிலும் டப்பிங் செய்யப்படுகிறது. மேலும் ஆங்கில சப்-டைட்டிலுடன் உலகெங்கும் வெளியிடப்படுகிறது. மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரலில் படம் திரைக்கு வரும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன் தெரிவித்துள்ளார்.
ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கும் இத்திரைப்படத்தை தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்குகிறார்.