மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

காங்கிரஸ், பாஜக இல்லாத கூட்டணி:இடதுசாரிகள் மும்முரம்

தேசிய அளவில் குறைந்தபட்ட செயல் திட்டத்தின் அடிப்படையில் காங்கிரஸ், பாஜக இல்லாத கூட்டணியை அமைக்கும் முயற்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிக் கட்சிகள் மேற்கொண்டுள்ளன.

Updated On :12 மே 2013, 5:53 am IST

தேசிய அளவில் குறைந்தபட்ட செயல் திட்டத்தின் அடிப்படையில் காங்கிரஸ், பாஜக இல்லாத கூட்டணியை அமைக்கும் முயற்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிக் கட்சிகள் மேற்கொண்டுள்ளன.

இதற்காக ஜூன்-ஜூலை மாதத்தில் பிற இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து தேசிய அளவிலான கூட்டமும் நடத்தப்பட இருக்கிறது. விரைவில் நடைபெறவுள்ள மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களிலும், அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலிலும் இந்த மூன்றாவது அணி போட்டியிடும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு கூட்டம் தில்லியில் சனிக்கிழமை தொடங்கியது. இதில், குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கி, அதன் அடிப்படையில் காங்கிரஸ், பாஜகவை ஏற்காத மதச்சார்பற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிர்ப்பு, நிலம் கையகப்படுத்துதல் மசோதா, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது உள்ளிட்டவை குறைந்தபட்ச செயல் திட்டத்தில் முக்கியத்துவம் பெறும் என்று தெரிகிறது.

இந்த ஆண்டு இறுதியில் 4 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தல், இப்போதைய தெளிவற்ற அரசியல் சூழ்நிலை, முன்கூட்டியே பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பு குறித்தும் கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

14-வது மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 44 உறுப்பினர்கள் இருந்தனர். ஆனால் இப்போதைய மக்களவையில் மார்க்சிஸ்ட் கட்சியின் பலம் 16 ஆக குறைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.